அட்டகத்தி, மெட்ராஸ் திரைப்படங்கள் மூலம் கோலிவுட்டில் பெயர் எடுத்தவர் பா.ரஞ்சித். தொடர்ந்து கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கினார்!
தற்போது காளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வன், துஷரா விஜயன் ஆகியோர் நடிப்பில் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை ரஞ்சித் இயக்கி முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து, இந்தியில் ஜார்கண்ட் மாநிலத்தின் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாக உள்ள ‘பிர்சா’ என்ற படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
பா.ரஞ்சித் இயக்குநராக மட்டும் இல்லாமல் நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் ஐந்தாவது படத்திற்கு ஜெ.பேபி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், டிக்கிலோனா மாறன் ஆகியோர் முக்கிய கதபாத்திரங்களாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெங்கட் பிரபு மற்றும் பா.இரஞ்சித் பணிபுரிந்த சுரேஷ் மாரி இப்படத்தை இயக்க உள்ளார்.