• Tue. Sep 10th, 2024

தனுஷ் – ஐஸ்வர்யா சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னாங்களாம் கஸ்தூரிராஜா குடுகுடுப்பை ஜோசியம்

கேணப்பய ஊரில் கிறுக்கு பையன் நாட்டாமையாக இருந்தான் என கிராமத்து பழமொழி ஒன்று உண்டு கேப்பையில் நெய் ஒழுகுது என்று சொன்னால் கேட்கிறவனுக்கு புத்தி எங்கடா போச்சு என்பார்கள் அப்படித்தான் இருக்கிறது தனுஷ்-ஐஸ்வர்யா திருமணமுறிவை இருவரும் நள்ளிரவில் அறிவித்தார்கள் ஒரு பக்கம் இருவரையும் சமாதானப்படுத்தி ஒன்றுசேர்த்துவிட்டால் உலகம் முழுவதும் கொரோனாவை வேரோடு புடுங்கி தீ வைத்து கொளுத்தி அழித்து உலக மக்களை காப்பாற்றிவிடலாம் என்று ரஜினிகாந்த் – தனுஷ் ரசிகர்களும் அவர்களுடன் சேர்ந்து சினிமா பிரபலங்களும் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்களாம்.

இதனை அமெரிக்க உளவுத்துறை உன்னிப்பாக கவனித்து மணிக்கொருமுறை அமெரிக்க ஜனாதிபதிக்கு தகவல் அனுப்பபட்டு வருவதை இந்திய உளவுத்துறையான ரா பிரதமர் நரேந்திர மோடிக்கு நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட் செய்து வருவதை இஸ்ரேல் உளவுத்துறை மொசாத் உன்னிப்பாக கவனித்துவரும் நிலையில் தனுஷ் தந்தை கஸ்தூரிராஜா அட போங்கப்பா இது சும்மா புருஷன் பொண்டாட்டிக்கு இடையிலான சாதாரண சண்டை அது சரியாகிடும் நான் போன்ல பேசிட்டேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சர்வதேச முக்கியத்துவம்மிக்க தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து ஏன் என மாலைமுரசு நாளிதழ் பயில்வான் ரங்கநாதன் என்பவரை வைத்து பச்சைபச்சையாக கொஞ்சையாக அடுத்தவன் படுக்கயறை விஷயத்தை அநாகரிகமாக பேசியது எல்லாம் புஷ்வானமாகி போனது கண்டு அமித்ஷா அரண்டுபோயி இருக்காரு என செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்க தொடங்கியுள்ளது ஆமா அந்த தனுஷ் – ஐஸ்வர்யா பஞ்சாயத்து என்னானு பார்க்கலாமா வாங்க

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷும் விவாகரத்து முடிவை அறிவித்தது தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக். இருவரும் விவாகரத்துக்கான காரணங்களை தெரிவிக்காததால், அது என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். இதுதொடர்பாக கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்தால், ஏராளமான காரணங்கள் கூறப்படுகிறது.

தனுஷும், ஐஸ்வர்யாவும் திருமண உறவை முறித்துக் கொள்ளும் முடிவை 2 வாரங்களுக்கு முன்னதாகவே எடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளார்களாம். பல வருடங்களுக்கு முன்பே இதுபோன்ற ஒரு நிலை வந்த போது இருதரப்பு குடும்பமும் பேசி அந்த பிரச்சனையை சுமூகமாக முடித்து வைத்துள்ளனர். இது நடந்து 7 வருடங்களுக்கு மேல் இருக்குமாம்.அதன்பின் இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

தனுஷ் பற்றிய சில புகார்கள் ஐஸ்வர்யாவுக்கே நேரடியாக பறந்துள்ளன. அதில் தான் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை முற்றி இருக்கிறது. இந்த விவகாரம் ரஜினிக்கு தெரிந்தும் அவர் சரியாகிவிடும் என அமைதி காத்து வந்துள்ளார். ஆனால் தனுஷை பற்றி திரையுலக வட்டாரத்தில் தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்ததை அடுத்து, ஐஸ்வர்யாவே இதுதொடர்பாக ஒரு நடிகையிடம் நேரடியாக கேட்டுள்ளார்.

அந்த நடிகை விஷயத்தை தனுஷ் காதில் ஓதிவிட, அது தனுஷ் – ஐஸ்வர்யா இடையே மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தான் இருவரும் விவாகரத்து முடிவை எடுத்துள்ளனர்.இந்த விஷயத்தை இருவரும் தங்களது குடும்பத்தினர் முன்னிலையில் போட்டுடைக்க… அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளார் ரஜினி. இருவரிடமும் தனித்தனியாக பேசிய ரஜினி, குழந்தைங்க இருக்காங்க…

அத மனசுல வச்சு முடிவெடுங்க என அட்வைஸ் பண்ணி உள்ளார். ஆனால் இருவரும் அதற்கு செவி சாய்க்கவில்லை இரண்டு வாரங்களாக சமாதானப்படுத்த முயற்சித்தும் பலனில்லாததால், இனி நாம சொல்றதுக்கு ஒன்னும் இல்ல என ஒதுங்கிவிட்டாராம் ரஜினி. இதையடுத்து தான் இருவரும் விவாகரத்து முடிவை அறிவித்து இருக்கிறார்கள். இதன்பின் இருவரும் சட்ட ரீதியாக விவாகரத்து பெற்று பிரிவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்களாம்.

இருவரின் பிரிவை நடிகர் ரஜினிகாந்த் அமைதியாக ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து பேசியுள்ள தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா. இருவரும் விவாகரத்துசெய்யவில்லை.. கணவன் மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுதான். இது வெறும் குடும்ப சண்டை விரைவில் சரியாகிவிடும் என கூறியுள்ளார். அதோடு தற்போது ஐதராபாத்தில் இருக்கும் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவுரை கூறியுள்ளதாகவும். விரைவில் இருவரும் நல்ல முடிவு எடுப்பார்கள் என நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *