• Sun. Dec 3rd, 2023

வருகிறது பிக்பாஸ் அல்டிமேட்…சீசன் 5 போட்டியாளர்கள் களம் காண்பார்களா??

Byகாயத்ரி

Jan 20, 2022

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமையுடன் நிறைவடைந்தது. இதில் சின்னத்திரை நடிகரான ராஜு ஜெயமோகன் வின்னர் ஆனார். பிரியங்கா ரன்னர் அப் ஆனார். இதனை தொடர்ந்து முதல் முறையாக தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளியானது.

அதாவது, டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதற்காக வெளியான புரமோ அசத்தலாக இருந்தது. இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்றும் வார இறுதி நாட்களில் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் 4 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களில் சிலர் மட்டுமே பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. அதன்படி வனிதா, பரணி, சுரேஷ் சக்கரவர்த்தி, சினேகன், அபிராமி, சுஜா வருணி, ஷாரிக், தாடி பாலாஜி, அனிதா சம்பத் மற்றும் பாலாஜி முருகதாஸ் ஆகியோரின் பெயர்கள் அடி பட்டு வருகிறது. எனினும் உறுதி செய்யப்படவில்லை.அதேநேரத்தில், அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5-யில் பங்கேற்ற யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, பிக்பாஸ் சீசன் 5-யில் பங்கேற்றவர்களில் 3 போட்டியாளர்கள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தாமரை செல்வியின் பங்கேற்பு உறுதியாகிவிட்டது என்றும், அவரை தொடர்ந்து பிரியங்கா மற்றும் அபிஷேக் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *