• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

சாமி சிலையின் கைகளை உடனடியாக சரி செய்து வைக்க பக்தர்கள் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Jun 12, 2026

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 11 7 2025 ஆண்டு தான் முன்புதான் கும்பாபிஷேகம் நடைபெற்றது இன்னும் ஒராண்டுகள் முடியவில்லை.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் கோயில் வாசல் முன்பாக இருபுறங்களிலும் 2 குதிரையை தாங்கி படிய உள்ள அம்மன் சிலை உள்ளது.

மேலும் இதில் கோயில் நுழையும் போது இடதுபுறத்தில் உள்ள அம்மன் சிலையின் கை உடைந்து காணப்படுகிறது. உடைந்த கையின் பகுதியும் அந்த அம்மன் சிலையின் காலடியில் உள்ளது.

இந்த காட்சியை பார்த்து சொல்லும் பக்தர்கள் மிகவும் வருத்தப்பட்டு இதை கூடவா சரி செய்ய மாட்டேன் இருக்கிறார்கள். என்று மன வேதனையுடன் கூறி செல்கிறார்கள்.

11ந் தேதி இன்று அமைச்சர் மதுரை வந்துள்ள நிலையில் இதனை சரி செய்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் இதனை கோவில் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. ஆனால் மற்ற பிரசாத கடைகளில் விலை பட்டியல் வைப்பது தூய்மை பணி செய்வது என வேலை நடைபெற்றது.

இதனால் இந்த சாமி சிலையின் கைகளை உடனடியாக சரி செய்து வைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..