• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

சபரிமலைக்கு புனித மாலை அணிந்து விரதத்தை மேற்கொண்ட பக்தர்கள்..,

ByM.I.MOHAMMED FAROOK

Nov 17, 2025

காரைக்காலில் அமைந்துள்ள ஸ்ரீதர்மசாஸ்த்தா ஐயப்பன் ஆலயத்தில் கார்த்திகை மாதபிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டு சபரிமலைக்கு புனித மாலை அணிந்து விரதத்தை மேற் கொண்டனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த பச்சூரில் அமைந்துள்ள ஸ்ரீதர்மசாஸ்த்தா ஐயப்பன் ஆலயத்தில் விசுவாவசு வருஷம் கார்த்திகை மாத முதல்நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனை நடைபெற்றது. மஞ்சள், பால், தயிர், விபூதி, சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.

மேலும் இவ்வாலயத்தில் அமைந்திருக்கும் கன்னிமூல கணபதி மற்றும் மாளிகைபுரத்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இன்று கார்த்திகை முதல் நாள் என்பதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டு சபரி மலைக்கு செல்ல விரதம் மேற்கொள்ள இன்று ஐயப்பனின் புனித மாலையான துளசிமாலை அணிந்து கொண்டனர்.