• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவிலில் தெப்ப உற்சவத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

ByR. Vijay

Mar 19, 2025

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலை அடுத்த திருக்கண்ணபுரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சவுரிராஜ பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 வைணவ திவ்யதேசங்களில், 17ஆவது திவ்ய தேசமாக திகழ்கிறது.

பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மகப்பெருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான மாசி மகப்பெருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தங்க பல்லாக்கு, திருமேனி சேவை,தங்க கருட சேவை மற்றும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்று நடைபெற்றது.முன்னதாக பெருமாள் திருமஞ்சனம் நடைபெற்றது.பின்னர் ஸ்ரீதேவி,பூதேவி,ஆண்டாள், பத்மினி நாச்சியார்களுடன், சவுரிராஜப்பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளினார்.கோவிலின் எதிரே அமைந்துள்ள நித்திய புஷ்பகரணி திருக்குளத்தில் மூன்று முறை நூதன பங்களாதெப்பம் என்ற தெப்பம் வலம் வந்தது.தெப்பத்தில் பக்தி பாடல் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் நாதஸ்வர இன்னிசையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.