மேலக்கால் காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா பறவை காவடி எடுத்தும் பால்குடம் அக்னிச்சட்டி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மதுரை, சோழவந்தான் அருகே, மேலக்கால் காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் சாற்றுதளுடன் தொடங்கியது. நேற்று இரவு கோவில் வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து
கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அக்னிச்சட்டி பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி
இன்று காலை நடைபெற்றது. இன்று காலை ஆறு மணி அளவில் காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் வைகை ஆற்றுக்கு சென்று அங்கிருந்து பால்குடம் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர். பக்தர் ஒருவர் உடல் முழுவதும் அழகு குத்தி பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து காளியம்
மனுக்கு, பாலாபிஷேகம் நடைபெற்றது. மேல கால் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை, கிராம கமிட்டியினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.