• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி!

ByA.Tamilselvan

Jul 25, 2022

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா 2 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 28ஆம் தேதி நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள இன்று முதல் 30ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் வனத்துறை கேட்டின் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் வரிசையாக செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலைப்பாதையில் 5 இடங்களில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.மேலும் பாதுகாப்பு பணியில் விருதுநகர், மதுரை மாவட்ட போலீசார், வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் ஈடுபட உள்ளனர். பக்தர்கள் காலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.