• Fri. Apr 18th, 2025

கே. டி. ராஜேந்திர பாலாஜி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,

ByK Kaliraj

Apr 14, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சட்ட மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 134 பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அதிமுக சார்பில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான, கே. டி. ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு அம்பேத்கரின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து திருத்தங்கலில் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் . திருத்தங்கல் பஸ் நிறுத்தத்தில் உள்ள அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு ஆளூயர மாலை அணிவித்து அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ,பொதுமக்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி இனிப்புகள் வழங்கினார்.