• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தனுஷ்கோடிக்கு சுற்றுலா செல்ல அனுமதி மறுப்பு!..

Byமதி

Oct 1, 2021

ராமேஸ்வரத்தில் உள்ளது தனுஷ்கோடி அரிச்சல்முனை. இந்த கடற்கரையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல அனுமதி மறுக்கப்பட்ட வந்த நிலையில் நேற்று காலை முதல் தமிழ்நாடு ட்ரைக்களத்தான் விளையாட்டு சங்கம் சார்பில் 150 வீரர்கள் அரிச்சல் முனையில் தொடர் ஓட்டம் சைக்கிளிங் உள்ளிட்ட விளையாட்டுகள் நடைபெற்று வருவதால் முன்னறிவிப்பின்றி தனுஷ்கோடி செல்லும் சுற்றுலாப் பயணிகளை நடராஜபுரத்தில் போலீசார் தடுப்பு அமைத்து தடுத்து நிறுத்தினர்.

முன்னறிவிப்பின்றி திடீரென தனுஷ்கோடி செல்ல தடை விதிக்கப்பட்டதால் உள்ளூர் மீனவ மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழகம் மற்றும் வெளிமாநில வாகனங்களை தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்கு மேலாக தனுஷ்கோடி செல்ல அனுமதிக்காததால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

மேலும், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் போலீசாருடன் வாக்குவாதம் செய்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த நகர் காவல் நிலைய ஆய்வாளர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாபயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பின் பத்து பத்து வாகனங்களை தனுஸ்கோடிக்குள் அனுப்பி வைத்தனர்.