கன்னியாகுமரியில் கடற்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் இன்று திரளான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி இன்று நடந்தது.