• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

காவல்துறையை கண்டித்து பாரத இந்து மகா சபா சார்பில் ஆர்ப்பாட்டம்!..

காவல்துறையை கண்டித்து நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில பாரத இந்து மகா சபா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில பாரத இந்து மகா சார்பாக வங்கதேச இனப்படுகொலைக்கு எதிராக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கைதாகி விடுதலை ஆன கோவை மண்டல இளைஞரணி தலைவர் பாக்ஸர் பிரேம் மீது மீண்டும் பொய் வழக்கு போட முயற்சி செய்யும் காவல்துறையின் செயலை கண்டித்தும், நவம்பர் 3ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசி மாநில இளைஞரணி தலைவர் சுபாஷ் என்பவரின் காரை சேதப்படுத்திய குற்றவாளிகளை கண்டு பிடிக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் காவல்துறையை கண்டித்தும் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலம் முன்பு நவம்பர் 23 ஆம் தேதியான இன்று அகில பாரத இந்து மகாசபா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவரும், தேசிய துணைத் தலைவருமான தா.பாலசுப்ரமணியன், மாநில இளைஞரணி செயலாளர் துரைராஜ் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.