• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லாணுக்கு ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் காளை மாட்டு சிலை அருகே சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு மணிமண்டபம் விரைவாக கட்டி முடிக்க வேண்டுமென்று கோரிக்கையை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசே ஈரோடு மாநகரின் மையப் பகுதியில் பொல்லா னுக்கு குதிரையில் அமர்ந்து உள்ளது போல் சிலையும் மணிமண்டபம் அமைத்திடு, சட்டமேதை அம்பேத்கர், தந்தை பெரியார் அவர்களுக்கும் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் மணிமண்டபம் அமைத்திடு, தமிழகத்தில் அம்பேத்கர் சிலை இல்லாத மாவட்டங்களில் அம்பேத்கர் சிலை அமைத்திடு, வெள்ளையனை எதிர்த்து வீரமரணம் அடைந்த ஒண்டிவீரன், குயிலிக்கு சென்னையில் மணி மண்டபமும், சிவகங்கையில் குயிலிக்கு மணிமண்டபம் அமைத்திடு, மதுரையில் சமூக நீதிப் போராளி மதுரை வீரனுக்கு மதுரையில் சிலையும், அவர் பிறந்த பெரம்பலூர் மாவட்டத்தில் மணிமண்டபமும் அமைத்திடு என்ற கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் க.சதீஷ்குமார் தலைமை ஏற்றார். அழகேசன், கார்த்தி, மெய்யழகன், பன்னீர்செல்வம், முத்து, தாமரை, வெள்ளியங்கிரி, வீரமணி ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.
ஈரோடு பெரியார் நகர் பகுதி கழக செயலாளர் அதிமுக மனோகரன், முன்னாள் துணை மேயர் பழனிச்சாமி, நாகேந்திரன் மணிகண்டன்,ஆனந்தன் இளங்கோவன், கண்ணன் சண்முகம் செல்வராஜ் பழனிச்சாமி பாண்டியம்மாள் முல்லை அரசு, முருகன், செல்வகுமார்,கொங்கு யுவராஜ், ஆதிதர்மன், குருசாமி பிரகாஷ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.