

கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரி இந்திய தொழிலாளர்கள் பேரவை சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
இந்தியா முழுவதும் கட்டுமான பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்தக் கோரி இந்திய தொழிலாளர்கள் பேரவையின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணை செயலாளர் பொங்காளி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை உடனடியாக மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் எனவும், இதற்காக விலை நிர்ணய ஆணையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் இதுகுறித்து அளித்த பேட்டியில் இந்தியா முழுவதும் கட்டுமான பொருட்கள் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது உள்ளது குறிப்பாக தமிழகத்தில் சிமெண்ட் கம்பி செங்கல் மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை கடந்த ஆறு மாதத்தில் 40 முதல் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதனால் ஏழை எளிய மக்கள் வீடு கட்ட முடியாத சூழல் உருவாகியுள்ளது மேலும் இதை நம்பியுள்ள பல லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர் இதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் கட்டுமான விலையை கட்டுப்படுத்த விலை நிர்ணய ஆணையத்தை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கட்டுமான பொருட்களை ஏற்றத்தால் கட்டுமான தொழிலாளர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கிறது என்றும் கட்டுமான தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறினர் உடனடியாக அரசு விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
