• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

மீனவர்களுக்கான புயல் மற்றும் மழைக்கால நிவாரணநிதியை தீபாவளிக்கு முன்பே வழங்க வலியுறுத்தி; ஏஐடியுசி மீனவர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம்..!

தமிழ்நாடு மீன்வளத்துறையால் மீனவர்களுக்கு வருடம்தோறும் வழங்கப்பட்டு வரும் மீன்பிடி குறைவு கால நிவாரணம் மற்றும் புயல் பருவ கால சேமிப்பு நிவாரணம் இவைகளை உடனடியாக தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி மீனவர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.


ஏனெனில் இலங்கை கடற்படை தாக்குதல் மற்றும் புயல் அறிவிப்புகளால் கடந்த ஒரு மாத காலமாக மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் கடும் வறுமையில் வாடும் மீனவர்களுக்கு உரிய காலத்தில் அரசு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஏஐடியுசி மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் ராமேஸ்வரம் மீன்துறை, உதவி இயக்குனர் அவர்களிடம் முறையீடு செய்து காத்திருப்புபோராட்டம் நடைபெற்றது. மீனவத்தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் மாநில செயலாளர் சி.ஆர்.செதில்வேல் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.