

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள், சொகுசு வீடுகள் மற்றும் மசாஜ் சென்டர் ஆகிய இடங்களில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் உத்தரவின் பேரில் ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர் இதில் ஸ்வஸ்திக் ஸ்பா என்ற விடுதியின் பெயரில் விபச்சாரம் செய்தது தெரியவந்தது. அப்போது அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த அஸ்வதி, பெங்களூருவை சேர்ந்த அனு, சேலத்தை சேர்ந்த சுதா, தூத்துக்குடியை சேர்ந்த தங்கமணி, கிருஷ்ணகிரியை சேர்ந்த மதுபாலா என 5 பேரையும் சேலம் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் முக்கிய குற்றவாளி கேரளாவை சேர்ந்த விடுதி பொறுப்பாளர் மஞ்சு, ஏற்காடை சேர்ந்த கண்மணி ராஜா, மற்றும் மேலும் 5 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் முக்கிய குற்றவாளி மதன் என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.