• Wed. Jul 8th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

ராகுல்காந்தியை 10 தலை ராவணனாக சித்தரித்து, போஸ்டர் வெளியிட்ட பா.ஜ.க-வினரை கைது செய்ய கோரிக்கை கண்டன ஆர்ப்பாட்டம்..,

குமரி மக்களவை உறுப்பினர் தலைமையில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இளம் தலைவர் ராகுல் காந்தி எம்பி அவர்களை 10 தலை இராவணனாக சித்தரித்து கொச்சைப்படுத்திய பாஜக கட்சியை கண்டித்து குளச்சல் அண்ணா சிலை முன்பு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே. டி. உதயம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றி கண்டன குரல் எழுப்பினர். நிகழ்ச்சியில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் யூசப்கான், குளச்சல் நகர தலைவர் சந்திரசேகர், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்கியராஜன், கிழக்கு மாவட்ட மீனவரனி தலைவர் ஸ்டார்வின், மகிளா காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவி வதனா நிஷா உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.