

ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் அல்மஸ்ஜிதுல்ஃபலாஹ் பள்ளிவாசல் முன்பு எஸ்டிபிஐ கட்சி சார்பில் திரிபுராவில் முஸ்லிம்கள் மீதான வன்முறை தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமைவகித்து கண்டன உரையாற்றினார். உடன் நகர தலைவர் ரஜபுல்லாகான் நகர் செயலாளர் முகமது மீரா, செயற்குழு உறுப்பினர் செய்யது மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
