• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நம்பியூர் ஒன்றிய அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றிய அதிமுக சார்பில் ஆளும் திமுக அரசை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர் தம்பி சுப்பிரமணியம் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.நம்பியூர் ஒன்றிய தெற்கு செயலாளர் ஈஸ்வரமூர்த்தி,நம்பியூர், எலத்தூர் பேரூராட்சி அதிமுக செயலாளர்கள் கருப்பணன், சேரன் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கோபி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டார்.ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசும் போது… சொத்து வரி , மின் கட்டண, பால் விலை உயர்வு உள்ளிட்டவைகள் பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது. மேலும் நம்பியூர் பேரூராட்சி பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.


கடந்த ஆட்சியில் மக்கள் வளர்ச்சி திட்ட பணிகளில் சாலை பணிகள் முக்கியத்துவம் கொடுத்து செய்யப்பட்டன அதில் நம்பியூர் – சத்தியமங்கலம் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.கடந்த ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளான தாலிக்கு தங்கம், பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம், மடிக்கணினி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன என கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.