• Fri. Oct 4th, 2024

அருப்புக்கோட்டை புதிய பேருந்துநிலையத்தை இடிக்கும் பணிகள் தொடக்கம்..!

Byவிஷா

Apr 18, 2023

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் புதிய ஸ்மார்ட் பேருந்து நிலையமாக மாற்றப்பட உள்ளதால், அங்கு இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் செயல்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் முழுவதும் இடிக்கப்பட்டு ரூபாய் 8 கோடி மதிப்பில் புதிதாக ஸ்மார்ட் பேருந்து நிலையமாக கட்டப்பட உள்ளது இதற்காக அதன் அருகிலேயே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரிகளும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர் இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் 30 கடைகளையும் அதன் உரிமையாளர்கள் காலி செய்து சாவியை ஒப்படைக்குமாறு நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதனை எடுத்து ஒவ்வொரு கடையாக காலி செய்து அதன் உரிமையாளர்கள் சாவியை ஒப்படைத்து வருகின்றனர். இந்த கடை உரிமையாளர்களுக்கு தற்காலிக பேருந்து நிலையத்தில் தற்காலிக கடைகள் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதுஃ இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் கட்டடங்களை இடிக்கும் பணிகள் நேற்று (17.4.2023) துவங்கி உள்ளன .கடை உரிமையாளர்கள் சாவியை ஒப்படைத்த உடனேயே கடைகளை இடிக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்பட்டு புதிதாக பேருந்து நிலையம் கட்டும் பணிகள் துவங்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *