திண்டுக்கல் மாவட்டம்,கொடைக்கானலுக்கு செல்ல பழனி சாலை, வத்தலக்குண்டு சாலை என 2 நெடுஞ்சாலைகள் உள்ளது.
இதைத் தவிர்த்து, கொடைக்கானலிலிருந்து பெரியகுளம் செல்வதற்கு அடுக்கம் வழியாக ஒரு சாலையும் உள்ளது. இந்த சாலைகள் மிகவும் மோசமான பராமரிப்பு காரணமாக பயணிகள் போக்குவரத்துக்கு கடும் இடையூறாகவே உள்ளது. சாலையோரத்தில் வளர்ந்து நிற்கும் புதர் செடிகளை முறையாக அகற்றாததால் சாலைகள் குறுகி உள்ளது.
மேலும், நெடுஞ்சாலைகளில் மழைக்காலங்களில் நீர் வழிந்து ஓடுவதற்காக கால்வாய்கள் அமைக்கி றோம் என்ற பெயரில் சாலையை குறுக்கியுள்ள தால் கொடைக்கானலில் இருந்து பழனி செல்லும் சாலையும், வத்தலக்குண்டு செல்லும் சாலையும் மிகவும் சுருங்கியுள்ளது.
ஒரு கனரக வாகனம் வரும் சமயத்தில் மற்றொரு வாகனம் வந்தால், கடும் சிரமம் ஏற்படுகிறது. இரு வழி சாலைகளிலும் அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால்களால் சாலை கள் மட்டுமே சுருங்கி உள்ளது.
மழைக்காலங்களில், எந்த வடிநீரும் இந்தக் கால்வாய்களுக்கு செல்வ தில்லை. 2 நெடுஞ்சாலை களிலும் அமைக்கப்பட்டு ள்ள கால்வாய்களில் குப்பைகள் மட்டுமே தேங்கி யுள்ளது. மேலும், கடந்த சில மாதங்க ளுக்கு முன் கொடைக்கா னலில் இருந்து பழனிக்கு செல்லும் சாலை யில் சவரிக்காடு பகுதியை ஒட்டிய மலைச்சாலை கனமழை காரணமாக சரிந்தது.
இதனால், மாத க்கணக்கில் அவ்வழியாக போக்குவரத்து துண்டிக்க ப்பட்டு மணல் மூட்டைகள் அடுக்கி சாலையை சீரமை க்கும் பணி நடைபெற்றது.
ஆனால், அந்த சாலை சிதிலமடைந்து பல மாதங்கள் ஆகியும் தற்போது வரை சாலை சீரமைப்பு ப்பணி முழுமை அடைய வில்லை.
கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் பழனி மலைச்சாலை வழியாக கொடைக்கானல் வரும் வாகனங்கள் சாலை சீரமைக்கப்படாத அந்த இடத்தில் வரும் போது கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி விடுகிறது. அதோடு இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.
நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியப் போக்கால், இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் இரவு நேரங்களில் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கோடை சீசன் காலங்களில் பழனி-கொடைக்கானல் மலைச்சாலையில் அதிக மான வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், பழனி கொடைக்கானல் மலை ச்சாலையை சீரமைக்காத நெடுஞ்சாலைத் துறைக்கு பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கடும் கண்ட னத்தை தெரிவித்துள்ளனர்.
மேலும், பழனி-கொடை க்கானல், வத்தலகுண்டு- கொடைக்கானல் ஆகிய இரு நெடுஞ்சாலைகளின் ஓரங்களிலும் வடிநீர் வாய்க்கால் என்ற பெயரில் சாலையை குறுக்கி அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால்களை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மந்தகதியில் நடைபெற்று வந்த சாலை சீரமைப்பு பணி கிடப்பில் போடப்பட்டதற்கும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.