• Thu. Apr 25th, 2024

பதக்கங்களை கங்கையில் வீசி ஏறிந்த டெல்லியல் போராடும் மல்யுத்த வீரர்கள்

ByA.Tamilselvan

May 30, 2023

எங்கள் பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசுவோம் என்று டெல்லியில் போராட்டம் நடத்திவரும் மல்யுத்த வீரர்கள் தெரிவித்தனர் அதன்படி தங்கள் பதக்கங்களை ஆற்றில் வீசினர்
இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராடிவரும் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தங்கள் பதக்கங்களை உத்தரகாண்டில் உள்ள உத்தரகாண்டில் உள்ள புனித நகரமான ஹரித்வாரில் கங்கை நதியில் வீசி எறிவோம் எனக் கூறினர்
“எங்கள் பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசுவோம்” அவர்கள் கூறியிருக்கிறார்கள். அந்தப் பதக்கங்களை வைத்திருப்பதில் “அர்த்தம் இல்லை” என்றும் அவை மல்யுத்த கூட்டமைப்பின் பிரச்சாரத்திற்கான முகமூடியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர். பதக்கங்களை இழந்த பிறகு, தங்கள் வாழ்க்கைக்கு அர்த்தமில்லை என்றாலும், தங்கள் சுயமரியாதையில் சமரசம் செய்துகொள்ள முடியாது என அவர்கள் கூறியுள்ளனர்.
பதக்கங்களை யாரிடம் திருப்பிக் கொடுப்பது என்று யோசித்ததாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. “ஒரு பெண்ணான குடியரசுத் தலைவர், 2 கிலோமீட்டர் தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தார். எதுவும் பேசவில்லை” என்றும் அதனால் குடியரசுத் தலைவரிடம் திருப்பிக் கொடுக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
“எங்களை மகள்கள் என்று அழைக்கும் பிரதமரிடம் ஒப்படைக்கலாமா? ஆனால் அவர் இந்த மகள்களைப் பற்றி ஒருமுறைகூட அக்கறை காட்டவில்லை. மாறாக, புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் நம்மை அடக்கி ஆளும் தோரணையில் போட்டோகளுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்” என்று வேதனையுடன் கூறியுள்ளனர்.
“எங்களை சுரண்டுகிறார்கள், நாங்கள் போராட்டம் செய்தால் சிறையில் அடைக்கிறார்கள்” என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகட் ஆகியோரும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் ட்வீட் செய்தார்
டெல்லியில் போராட்டம் நடத்திவரும் மல்யுத்த வீரர்கள் அவர்கள் அறிவித்தபடியே ஒலிம்பிக் உள்ளிட்ட பல போட்டிகளில் வென்ற பதக்கங்களை ஹரித்வாரில் கங்கை நதியில் வீசினர். இந்த காட்சி பார்ப்பவர்களை கண்ணீர் விட செய்வதாக இருநத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *