• Sat. Oct 24th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் கோவில்களில் கொட்டும் மழையில் பிரதோஷ விழா..,

ByKalamegam Viswanathan

Oct 24, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு பிரளய நாத சிவன் கோவிலில் மற்றும் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சாமி கோவில் திருவேடகம் ஏலவார் குழலி அம்மன் ஏடகநாதர் ஆகிய கோவில்களில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷ விழா கொட்டும் மழையில்
நடைபெற்றது.

பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலில் இருந்த நந்தி பகவானுக்கு சந்தனத்தால் சிறப்பு அலங்காரம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிவபெருமானுக்கு பால் தயிர் நெய் இளநீர் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்பு கோவிலில் உள்பிரஹாரத்தில் சிவபெருமான் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெண்கள் பிரதோஷ ஊர்வலத்தில் கலந்து கொண்டு ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா என கோசங்கள் எழுப்பினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

சோழவந்தான் பிரளய நாத சிவன் கோவிலில் எம் வி எம் குழுமம் தலைவர் மணி முத்தையா வள்ளி மயில் தொழிலதிபர் மருது பாண்டியன் குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். செயல் அலுவலர் ராஜா மற்றும் பூபதி உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர் அர்ச்சகர் ரவி தலைமையில் பூஜைகள் செய்தனர். தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி கோவிலில் பிரதோஷ கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

செயல் அலுவலர் கார்த்திகை செல்வி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர். திருவேடகத்தில் செயல் அலுவலர் இளமதி மற்றும் பணியாளர்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனர். பிரதோஷ விழாவில் அந்தந்த பகுதி பொதுமக்கள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.