• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புத்தியை தீட்டு…

Byவிஷா

Oct 18, 2021

ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள். இருவரும் ஒரு பெரிய மரத்தை வெட்டினார்கள். மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவர் மட்டும் அதிகமாக மரங்களை வெட்டியிருந்தார். மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார்.


மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான்!
நண்பன் அவனிடம் கேட்டான், நாம் இருவரும் ஒரே மாதிரிதான் மரத்தை வெட்ட ஆரம்பித்தோம். ஆனால், நீ மட்டும் அதிகமாக வெட்டி இருக்கிறாயே என்று. நீ என்ன செய்தாய் என்று!. அதற்கு அவன் சொன்னான், இடை விடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று,..
சிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன், ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே ஆனால் நீ கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி என்று கேட்டான்!..
நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன் என்று சொன்னான் நண்பன்! மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை.


மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான், மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன் நண்பனை பின் தொடர்ந்து சென்றான், நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்தான், ஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாரியை தீட்டி கொண்டிருந்தான்! இப்பொழுதுதான் அவனுக்குப் புரிந்தது, கோடாரி கூர்மையாக இருந்தால், அதிக மரங்களை வெட்டலாம் என்று.