இந்தியாவிலேயே தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையில் அதிக இருந்த மாநிலம் கேரளா தான். கடந்த சில வாரங்களாகவே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததுள்ளது கேரள அரசு.
இதன் காரணமாக கேரளாவில் தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,000க்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து பாதிப்பு படிப்படியாக குறைவதால், பொதுமக்கள் ஆறுதல் அடைந்துவருகின்றனர். இருப்பினும் ஒமைக்ரான் தொற்றுக்கான அச்சம் உள்ளதால், அம்மாநில அரசு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.
கேரளாவில் கடந்த மூன்று நாட்களாக தினசரி 4,000-த்துக்கும் கீழ் பதிவாகி வந்த நிலையில், நேற்று தினசரி தொற்று 3,000-க்கும் கீழ் பதிவாகி வருகிறது.
கடுமையான விதிமுறைகளாலும், அரசின் தடுப்பு நடவடிக்கைகளாலும், தடுப்பூசி செலுத்துவதில் 97 சதவீதம் கடந்ததாலும் கேரளாவில் நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருவதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் கேரளாவில் ஒமைக்ரான் பாதிப்பு எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்களிடம் அச்சம் மீண்டும் தொற்றிக் கொண்டுள்ளது.