• Fri. Jun 12th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Byகாயத்ரி

Dec 14, 2021

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது.இந்தோனேசியாவின் மௌமரேவில் இருந்து 95 கிமீ வடக்கே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

நிலநடுக்கத்தின் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் நில தட்டுகளின் அசைவு காரணமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.