

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் 1,24,055 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் 1,021 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,01,614 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,172 பேர் குணமடைந்துள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
