கிளர்ச்சியாளர்களின் தாக்குதலைத் தொடர்ந்து கொலம்பியாவில் ராணுவ அவசரநிலையை பிரகடனப்படுத்துவதாக அந்நாட்டு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் கக்கடா மாகாணத்தைச் சேர்ந்த கிளர்ச்சி குழுக்கள் அண்டை நாடான கொலம்பியாவின் எல்லைக்குள் நுழைந்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் பொதுச்சொத்துகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதால் கொலம்பியா அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
இவர்களின் தாக்குதலைத் தடுக்க எல்லை பகுதியில் கொலம்பியா ராணுவ வீரர்களை நிலை நிறுத்தியுள்ளது. ஆனாலும், கொலம்பியா எல்லை வழியாக கிளர்ச்சியாளர்கள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது, அவர்களைத் தடுக்க முயன்ற ராணுவ வீரர்களுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் நடைபெற்றது. இந்த மோதலில் இருதரப்பிலும் இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனால் நிலைமையை சமாளிக்க வெனிசுலா எல்லையோர மாகாணங்களில் ராணுவ அவசர நிலையை அறிவித்து கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ உத்தரவிட்டுள்ளார். இதனால் அப்பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது-