• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்…

Byகாயத்ரி

Apr 2, 2022

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்பட எரிப்பொருட்களுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்துக் கிடக்கும் நிலை காணப்படுகிறது. தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு அமலில் உள்ளதால் பொதுமக்களின் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை முன்பு திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க தவறியதற்காக அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பிய அவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் அங்குள்ள ராணுவ காவல் வாகனத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அந்நாட்டு அதிபர் கோத்பய ராஜபக்சே அறிவித்துள்ளார்.