• Thu. Jun 25th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

இலங்கையில் அவசரநிலை பிரகடனம்..!

ByA.Tamilselvan

Jul 13, 2022

இலங்கையில் மக்களின் போராட்டம் தொடர்வதால் அங்கே அவரசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாத அரசைக் கண்டித்து மக்கள் போராட்டம் வெடித்தது.
அண்மையில் அதன் உச்சகட்டமாக, அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் மாளிகையை கைப்பற்றினர். தொடர்ந்து அங்கேயே தங்கி உள்ளனர். மேலும், பிரதமரின் தனி வீட்டையும் முற்றுகையிட்டு தீவைத்தனர்.அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாலத்தீவுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அதேபோல், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இந்நிலையில், மக்களின் போராட்டம் தொடரும் நிலையில் இலங்கையில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலுவலகம் அறிவித்துள்ளது.