• Thu. May 2nd, 2024

சுங்கச்சாவடி கட்டணத்தை 40% வரை குறைக்க முடிவு

ByA.Tamilselvan

Nov 21, 2022

நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க முடிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் நிதன்கட்கரி தெரிவித்துள்ளார்.
சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க மத்திய அரசு முடிவு எடுத்திருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் .மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள பதில் கடிதத்தில், சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுதோறும் திருத்தி அமைக்கப்படும். பொது நிதி உதவித்திட்டத்தில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் 60 கி.மீ. தூரத்திற்குள் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளதை அறிவேன். சில மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப தீர்வுகளைப் பயன்படுத்தி இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண முடிவு செய்துள்ளோம். பயணித்த தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் அத்தகைய தொழில்நுட்பம் மூலம், சுங்கச்சாவடிகளுக்கு இடையேயான தூரப் பிரச்னை தீரும். சோதனை முயற்சியைத் தொடர்ந்து, இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *