தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் விவசாயிகள் தேசியமய மாக்கப்பட்ட வங்கிகள்,கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன்களை மத்திய மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ஏக்கருக்கு 30 ஆயிரம் உற்பத்தி மானியமாக அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்,

தமிழ்நாடு அரசு தென்னை பனையிலிருந்து கள் இறக்க விற்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும், கரும்பு டன்னுக்கு ரூ 5000, நெல் குவிண்டாலுக்கு ரூ 4000, மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ 4000 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் உரிமை மீட்பு மற்றும் கடன் விடுதலை மாநாடு வரும் டிசம்பர் 28 ந் தேதி ஈரோட்டில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள கிராமங்களில் சங்க நிர்வாகிகள் சென்று விவசாயிகளை சந்தித்து கிளைகளை நிறுவ வேண்டும், விவசாயிகள் அனைவரும் மாநாட்டில் கலந்து கொண்டு மாநாடு வெற்றியடைய செய்ய வேண்டும் என பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.






; ?>)
; ?>)
; ?>)
