தமிழ் சினிமாவில் கதாநயகன்- காமெடி நடிகர் கூட்டணியில் தயாரான படங்கள் வணிகரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் சில குறிப்பிட்ட காமடி காட்சிகள் காலம் கடந்தும் மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் வடிவேலு காமடி நடிகராக நடித்துள்ள படங்களில் இடம்பெற்றுள்ள நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் சமூக வலைத்தளங்களில் கொட்டிக்கிடக்கிறது அந்த வகையில்பிரபுதேவா, வடிவேலு நடித்த ‘மனதைத் திருடி விட்டாய்’ படத்தில் இடம்பெற்றுள்ள காட்சியை வடிவேலு – பிரபுதேவா இருவரும் நினைவுகூர்ந்துள்ளனர்
மனதை திருடிவிட்டாய் வணிகரீதியாக தோல்விப்படம் என்றாலும் அந்தப்படத்தில் இடம் பெற்ற நகைச்சுவைக் காட்சி ஒன்று தனியார் தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பாகும். இப்போது கூட அந்தக் காட்சிகளைப் பார்ப்பவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. வடிவேலு, ‘சிங் இன் த ரெயின், ஐ வான்ட் சிங் இன் த ரெயின்’ என்று ஹோட்டல் ஒன்றில் பாடி நடிக்கும் காட்சியை யாராலும் மறக்க முடியாது. பிரபுதேவா, வடிவேலு , விவேக் மூவரும் இந்தக் காட்சியில் இடம்பெற்றிருப்பார்கள் 1994 ஆம் ஆண்டு வெளியான காதலன் படத்தில் முதல் முறையாக இணைந்த பிரபுதேவா- வடிவேலு கூட்டணி பலபடங்களில் இணைந்து நடித்துள்ளார்கள்.
பிரபுதேவா, வடிவேலு தற்போது சந்தித்த வீடியோ ஒன்றை பிரபுதேவா பகிர்ந்துள்ளார். அதில் வடிவேலு அந்த ‘சிங் இன் த ரெயின்’ பாடலைப் பாடி, பிரபுதேவாவைக் கட்டிப் பிடித்து மகிழ்ந்துள்ளார். ‘நட்பு’ என ஒரே ஒரு வார்த்தையில் அந்த சந்திப்பு பற்றி பதிவிட்டுள்ளார் பிரபுதேவா.