• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

புதிய பாலத்தில் சேதமடைந்த தடுப்பு கம்பிகள்..!

Byவிஷா

Jun 7, 2023

கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட புதிய பாலத்தின் தடுப்புக் கம்பிகள் சேதமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஓபுளா படித்துறை பாலத்தில் வாகனம் மோதியதியதில் தடுப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளன. மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஓபுளா படித்துறை பாலம் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதில் தற்போது வாகனம் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்நிலையில் வாகனம் மோதியதில் தடுப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளன. நடைமேடையில் நடந்து செல்பவர்களுக்கு இது இடையூறாக உள்ளது. எனவே இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.