தலித் கிறிஸ்தவர்களுக்கு பட்டியலின உரிமை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிறிஸ்தவ மக்கள் களம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகில் கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் மற்றும்
கிறிஸ்தவ மக்கள் களம் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சேவியர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களாக , மக்கள் தேசம் கட்சித் தலைவர் ஆசைத்தம்பி, வேதமணிபறையனார், குரு விஜய்பறையனார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையிலான
தலித் கிறிஸ்தவர்களுக்கு பட்டியலின உரிமை வழங்க உரிய நடவடிக்கை எடுத்த வேண்டும், நீதி அரசன் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தில் பரிந்துரையை அமல்படுத்த கோரியும், பல ஆண்டுகளாக சமூக நீதி மறுக்கப்பட்டு வஞ்சிக்கப்படும் தலித் கிறிஸ்தவர்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு வழங்கிட வலியுறுத்தியும் கோரிக்கை முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சியில் உள்ள தலித் கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து கோரிக்கையின் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்டனர். மத்திய மாநில அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர்.