• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

கொரோனா தினசரி பாதிப்பு 3 ஆயிரமாக சரிவு

ByA.Tamilselvan

Oct 3, 2022

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,011 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 97 ஆயிரத்து 498 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 4,301 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 32 ஆயிரத்து 671 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 36,126 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 1,318 குறைவு ஆகும்.