• Tue. Mar 28th, 2023

இளையராஜாவுக்கு தாதா சாகேப் விருது!

இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே பிறந்த தினமான ஏப்ரல் 30-ம் தேதியை முன்னிட்டு, வருடந்தோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அதன்படி 12வது தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.

இதில், இசையானி இளையராஜாவின் இசையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் உருவாகி வரும் ‘ஏ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ என்ற படத்திற்காக இளையராஜாவிற்கு பின்னணி இசைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஏ5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அறிமுக நடிகர்களான க்ரிஷ் மற்றும் மேட்டில்டா ஆகியோர் நடித்தனர். ‘எ பியூட்டிஃபுல் பிரேக்அப்’ என்பது இளையராஜாவின் 1422வது படமாகும்.

ஜோதிகா சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த ஜெய்பீம் திரைப்படத்திற்கு இருவிருதுகள் கிடைத்துள்ளது. தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில், ஜெய்பீம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல மணிகண்டன் சிறந்த துணைநடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சிறந்த நடிகராக Toofaan படத்தில் நடித்தற்காக ஃபர்கான் அக்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாந்தி டிடிஆர் மற்றும் விஜய்கிருஷ்ணா சிறந்த அறிமுக இயக்குனருக்கான தாதாசாகேப் பால்கே திரைப்பட விழா 2022 விருதைப் பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *