தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் அறநிலையத் துறையின் கீழ் உள்ள திருக்கோவில்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இசை கல்லூரி, இசைப் பள்ளிகளில் பயின்று பயிற்சி பெற்ற கலைஞர்களை கொண்டு இந்த நிகழ்ச்சிகளை நடத்த இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.