• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

உல்லாசக் கப்பலில் தீ விபத்து..

Byகாயத்ரி

Feb 18, 2022

கிரீஸில் இருந்து 288 பேருடன் சென்ற யூரோபெரி ஒலிம்பியா என்ற உல்லாசக் கப்பல் திடீரென நடுக்கடலில் தீ விபத்து ஏற்பட்டது.

கிரீஸில் இருந்து மத்தியதரைக் கடலின் அயோனியன் வழியாக யூரோபெரி ஒலிம்பியா என்ற உல்லாசக் கப்பல் இத்தாலி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்தக் கப்பலில் 237 பயணிகள் மற்றும் 51 பணியாளர்கள் என மொத்தம் 288 பேர் இருந்தனர்.இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் கிரீஸூக்கும் அல்பேனியாவுக்கும் இடையே உள்ள கோர்பு தீவுக்கு அருகில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.விபத்து நடந்த பகுதிக்குச் சென்ற மீட்புப் படையினர் கப்பலில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டு அருகில் இருந்த கோர்பு தீவில் கொண்டு சேர்த்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.