காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவரும் மான ராகுல் காந்தியின் 55 வது பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் காங்கிரஸ் சார்பில் கிரிக்கெட் தொடர் போட்டி நடைப்பெற்றது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் , எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் 55வது பிறந்தநாள் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின,ரால் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக காரைக்கால் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில் புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரஞ்சித் தலைமையில் இரண்டு நாட்கள் நடைப்பெற்ற தொடர் கிரிக்கெட் போட்டியின் பரிசு அளிப்பு விழா நடைபெற்றது.

இதில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் Av சுப்பிரமணியன். மாவட்ட தலைவர் சந்திர மோகன். நெடுங்காடு வட்டார காங்கிரஸ் தலைவர் மாறன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள். முன்னதாக ராகுல்காந்தி பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர். தொடர்ந்து முதல் இடத்தை பிடித்த அணியினருக்கு ரூ.25000 ஆயிரமும் சுழற்கோப்பையும், இரண்டாம் இடம் பிடித்த அணியினருக்கு ரூ.20.000 ரூபாயும் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.