• Sat. Mar 22nd, 2025

ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதியை கண்டித்து, நீதிமன்ற ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதியை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நீதிமன்ற ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பகல் மற்றும் இரவு நேரத்தில் நீதிமன்றத்திலும் நீதிபதியின் குடியிருப்பிலும் ஓய்வின்றி பணியாற்ற வேண்டும் என்ற அந்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் தனது உயிரை மாய்த்துக் கொண்ட கட்டளை நடத்துனர் அருண் மாரிமுத்து அவர்களது மரணத்துக்கு நீதி கிடைக்கும் வகையில் தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க மாநில மையத்தின் அறிவுறுத்தலின்படி ஊழியரின் இறப்பிற்கு காரணமாக இருந்த அந்நீதிமன்ற நீதிபதி மீது மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இன்று மாலை 6:00 மணிக்கு பின்னர் நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தின் வெளியே கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க மாநில பொருளாளர், அரசு ஊழியர் சங்க துணை தலைவர், மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டு வரும் காலங்களில் இதுபோன்ற அடக்குமுறையை திணிக்காமல் நீதிமன்ற ஊழியர்களின் பணிபாதுகாப்பை மாண்புமிகு உயர்நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்று தங்களது கோரிக்கையை பதிவு செய்தனர்.

நீதிமன்றம் நேரத்திற்கு பின் நீதிமன்றம் வளாகத்தில் நீதித்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தியவர்கள். தங்களின் பணி பாதுகாப்பிற்கு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்கள்.