• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வட மாநில தொழிலாளர்களோடு ஹோலி கொண்டாடிய கவுன்சிலர்

ByS.Navinsanjai

Mar 7, 2023

பல்லடம் அருகே சித்தம்பலம் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களோடு ஹோலி கொண்டாடிய பல்லடம் 18 ஆவது வார்டு கவுன்சிலர்-

கடந்த சில நாட்களாக வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான வீடியோக்கள் பரவி வரும் நிலையில் வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக உள்ளனர் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் தமிழர்களோடு வட மாநில தொழிலாளர்களும் சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வருகின்றனர் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் இன்று பல்லடம் அருகே சித்தம்பலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பல்லடம் நகராட்சி 18 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சசிரேகா ரமேஷ்குமார் தனது குடும்பத்துடன் வட மாநில தொழிலாளர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
மேலும் வண்ண பொடிகளை பூசி வடமாநில தொழிலாளர்களோடு ஹோலி பண்டிகையை கொண்டாடினார். வட மாநில தொழிலாளர்களும் அவருக்கு வண்ணப் பொடிகளை பூசி மகிழ்ந்தனர். பல்லடம் பகுதியில் வட மாநில தொழிலாளர்களுக்கு என்றும் பாதுகாப்பாக இருப்போம் எனவும் தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளோம் எனவும் பல்லடம் 18 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் சசிரேகா ரமேஷ் குமார் உறுதி அளித்தார். வடமாநில இளைஞர்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் வண்ணப் பொடிகளை பூசி மகிழ்ந்தனர்.