• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கையூட்டு பெற்றுக் கொண்டு மீன் பிடிக்கும் நபர்களுக்கு ஆதரவாக கண்மாய் திறப்பு?சமூக ஆர்வலர்கள் வேதனை

ByKalamegam Viswanathan

Mar 7, 2023

பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் திறக்கப்பட்டது கம்மாயிலிருந்து தண்ணீர் மீன் பிடிக்கும் நபர்களுக்கு ஆதரவாக கையூட்டு பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் இருக்கிறார்களா ??சமூக ஆர்வலர்கள் வேதனை.


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள மூட்டா காலணி, அய்யப்பன் தங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் நேற்று இரவில் திடீரென தண்ணீர் புகுந்தது. இது குறித்து குடியிருப்பு வாசிகள் கூறுகையில் தற்போது மழை பெய்யவில்லை. இந்த நிலையில் திடீரென நேற்று இரவு முதல் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் செல்கின்றது. இந்த தண்ணீர் எங்கிருந்து வருகின்றது என பார்க்கும் போது. தென்கால் கண்மாயில் உள்ள கால்வாய் வழியாக தென்கால் கண்மாயில் இருந்து இரவோடு இரவாக எந்தவித அறிவிப்பும் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு மீன் குத்தகைதாரர்களுக்கு உடந்தையாக பொதுப்பணி துறையை சேர்ந்த சிலர் விவசாய பணிகள் முடிந்து அறுவடை செய்யும் இந்த நேரத்தில் தண்ணீர் திற்ந்து விடுவதாகவும் இதனால் கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் குறையும் எனவும் கூறுகின்றனர். மேலும் மீன் பிடிப்பதற்காக தண்ணீரை காலி செய்ய பொதுப்பணி துறை உடந்தையாக உள்ளதாகவும் உடனடியாக தண்ணீரை நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர் நடவடிக்கை எடுக்கும் மாவட்ட நிர்வாகம்