• Wed. Mar 19th, 2025

மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு… மத்திய அரசு அறிவுறுத்தல்..!

ByA.Tamilselvan

Mar 16, 2023

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு மத்திய அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார்.அதன்படி கொரோனோ பரிசோதனைகள், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார்.