இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மெகா தடுப்பூசி முகாம் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், உத்தரகாண்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் சென்றடைந்து உள்ளதாக, மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தனது டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார்.
இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் உத்தரகாண்டின் இந்த சாதனை மிகவும் முக்கியமானது என அவர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, இதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானது எனவும் கூறியுள்ளார்.