• Fri. Jun 9th, 2023

மத்திய பிரதேசத்தில் கட்டுக்குள் வந்த கொரோனா…

Byகாயத்ரி

Nov 18, 2021

மத்திய பிரதேசத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால் அனைத்து கட்டுப்பாடுகளும் உடனடியாக திரும்ப பெறப்படுவதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் உடனடியாக திரும்பப் பெறப்படுவதாகவும், அனைத்து சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார மற்றும் மத நிகழ்வுகள் முழு அளவில் செயல்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முழு அளவில் செயல்படலாம் எனவும், அவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் திரும்ப பெறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, அனைத்து நிறுவன ஊழியர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மட்டுமின்றி வாடிக்கையாளர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *