தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல பிரபலங்களுக்கும், அரசியல் புள்ளிகளுக்கும் தொற்று ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் முக்கியமாக செயல்படும் அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் வைகோவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இருந்தாலும் இந்த கொரோனா வைரசால் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள் என முக்கிய பணியில் ஈடுபடுபவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் வைகோவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது வீட்டில் அவரே தனிமை படுத்திக்கொண்டுள்ளார்.