நம்ம ஊரு இளசுகள் மனதில் நீங்கா இடம்பிடித்த விட்ட நடிகையாக இருப்பவர் ‘பேச்சிலர்’ பட நடிகை திவ்யா பாரதி. திவ்யா.. திவ்யா என்று கத்தாத குறைதான். அந்த அளவுக்கு மொபைல் ஸ்கிரீன், சமூக வலைத்தள டிபி என எல்லா இடத்திலும் திவ்யாபாரதியின் புகைப்படம்தான்.
தற்போது ஒரு மணி நேரத்திற்கு ஒரு போட்டோஷூட்டை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி தன்பால் ஈர்த்து வருகிறார். பேச்சிலர்’ படத்தில் இவருடன் நடித்த ஜி.வி.பிரகாஷையே மிஞ்சும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார்.லிவிங் டுகெதர் என்ற தற்போது இளம் வயதினர் விரும்பும் வாழ்க்கை முறையில் ஆண்-பெண் இடையிலான உறவுச்சிக்கலை வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் எந்த தயக்கமும் இன்றி முத்த காட்சி, படுக்கையறை காட்சியில் நடித்துள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரி சேர்ந்த இவரின் உண்மையான பெயரும் திவ்யபாரதிதான். மாடல் அழகியான இவர், மிஸ் எத்னிக் ஃபேஸ் மற்றும் ஃபிரிசன்ஸ் ஆப் கோயம்புத்தூர் உள்ளிட்ட அழகி பட்டங்களை வென்றுள்ளார். நன்கு தமிழ் பேச தெரிந்த இவர், 1994-ஆம் ஆண்டு பிறந்தவர். இந்நிலையில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் புகைப்படத்தை பார்த்தவர்கள் நல்லவேளை பிறந்தநாளை கொண்டாட பிறந்த கோலத்தில் வராமல் விட்டாரே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.