• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மீனாவின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் முக்கிய பிரமுகர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை மீனா உள்பட அவரது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தகவலை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பதிவிட்டுள்ள அவர், 2022ல் எனது வீட்டிற்கு வந்த முதல் பார்வையாளராக கொரோனா வந்து அது என் முழு குடும்பத்தையும் பிடித்துள்ளதாகவும், ஆனால் நான் அதை இருக்க விடப்போவதில்லை. மக்கள் அனைவரும் ஜாக்கிரதையாக இருங்கள். தயவுசெய்து பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். பொறுப்பாக இருங்கள். இந்த வைரசை பரவ விடாதீர்கள் எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என மீனா கூறி உள்ளார் என பதிவிட்டுள்ளார்.