• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

நியூசிலாந்து பிரதமருக்கு கொரோனா தொற்று

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருப்பவர் ஜெசிந்தா ஆர்டெர்ன் (40). இவருக்கு, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராக உள்ள கிளார்க் கைபோர்டு (44) என்பவருடன் கடந்த 2019ஆம் ஆண்டு நிச்சயம் செய்யப்பட்டது.திருமணத்துக்‍கு முன்பே இணைந்து வாழும் இவர்களுக்‍கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு பின்னர் அந்த தேதியை பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ரத்துசெய்தார். விரைவில் புதிய தேதியை அறிவித்து அந்நாளில் இருவரும் திருமணம் செய்ய உள்ளனர்.இந்த நிலையில், நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த தகவலை அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது. அவருக்கு கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் லேசாக இருப்பதாகவும், மேலும் அவர் ஏழு நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார் என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

இனிடையே, கடந்த 8ஆம் தேதி நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்வின், காதலன் கிளார்க் கைபோர்டு-க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அப்போது பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தன்னை 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.